கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதற்பக்கக் கட்டுரைகள்
|
சுவாதித் திருநாள் ராம வர்மா 1829 முதல் 1846 வரை இந்தியாவின் திருவிதாங்கூர் சமத்தானத்தை ஆண்ட மன்னராவார். இவருடைய தாய் மகாரானி கவுரி லட்சுமி பாய் 1810-1815- ஆம் ஆண்டு வரை திருவிதாங்கூர் சமத்தானத்தை ஆங்கிலேயரின் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் உதவியுடன் ஆண்டு வந்தார். மகாராணி லட்சுமி பாய் - இராசராச வர்மா கோயில் தம்புரான் தம்பதியருக்கு 1813 ஆம் ஆண்டு சுவாதித் திருநாள் ராம வர்மா பிறந்தார். இவர் பிறந்த ஆண்டிலேயே அரசராக அறிவிக்கப்பட்டார். மகாராணி கவுரி லட்சுமி பாய் இறந்த பின், 1815 ஆம் ஆண்டு முதல் 1829 ஆம் ஆண்டு வரை அரசனின் இளவயது காரணமாக நாட்டினைப் பதிலுக்கு ஆள்பவர் என்ற முறையில் மகாராணி கவுரி பார்வதி பாய் ஆட்சி செய்தார். சுவாதித் திருநாள் 1829 ஆம் ஆண்டு தக்க அகவையடைந்ததும் முழு அரசாங்க அதிகாரத்தையும் ஏற்று திருவிதாங்கூர் அரசைத் தன அந்திமக் காலமான 1846 ஆண்டு வரை ஆண்டார். சுவாதித் திருநாள் சிறந்த ஆட்சியாளர் மட்டுமல்லாமல், சிறந்த இசை வல்லுனரும் இசைப் புரவலரும் ஆவார். இவர் 400க்கும் மேலான கீர்த்தனைகளை கருநாடக இசை மற்றும் இந்துஸ்தானி இசை வடிவங்களில் இயற்றியுள்ளார். மேலும்...
மதுரை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். மதுரை மாவட்டத்தின் தலைநகராக இருக்கும் மதுரை, மக்கள் தொகை அடிப்படையிலும் நகர்ப்புற பரவல் அடிப்படையிலும் மாநிலத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும். வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை நகரம் இங்கு அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக அதிகம் அறியப்படுகிறது. நகரின் உள்ளாட்சி நிர்வாகம் மதுரை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்திய துணைக்கண்டத்தில் ஒரு தொன்மையான வரலாற்றைக் கொண்ட மதுரை நகரம், சுமார் 2500 ஆண்டுகள் பழமையான, தொடர்ந்து மக்கள் வசித்து வரும் உலகின் சில நகரங்களுள் ஒன்று பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கிய மதுரை தமிழ் மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. சங்க காலம் என குறிக்கப்படும் கிமு.3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி. 3 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் தமிழ் மொழி அறிஞர்களைக் கொண்டு மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டு தமிழை வளர்த்த பெருமையுடைய நகரம் மதுரை. மேலும்...
மேலும் கட்டுரைகள்...
|
உங்களுக்குத் தெரியுமா?
|
தொகுப்பு
|
|
|
நீங்களும் கட்டுரை எழுதலாம்
|
- தமிழ் விக்கிப்பீடியாவில் நீங்களும் கட்டுரை எழுதலாம் என்பதை அறிவீர்களா? இன்றே உங்கள் முதல் கட்டுரையைத் தொடங்குங்கள்.
- கட்டுரைத் தலைப்பும் உள்ளடக்கமும் தமிழில் இருக்க வேண்டும். பார்க்க: தமிழ்த் தட்டச்சு உதவி
- நீங்கள் வாழும் ஊர், அண்மையில் படித்த நூல், பார்த்த திரைப்படம், புகழ்பெற்ற ஆளுமைகள் என பல வகையான தலைப்புகள் குறித்தும் எழுதலாம். ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளை மொழிபெயர்த்தும் எழுதலாம். காப்புரிமை உள்ள கட்டுரைகள், படிமங்களைப் பயன்படுத்த வேண்டாம்.
- கட்டுரைகள் சரியான தகவலை மட்டும் முன்னிறுத்தி சொந்தக் கருத்துகள் இன்றி, நடுநிலையுடன், ஆதாரத்துடன் இருக்க வேண்டும். தனி நபர்கள், நிறுவனங்கள் பற்றிய விளம்பரங்கள், உயர்வு நவிற்சிகள், அனுபவ வலைப்பதிவுக் கட்டுரைகளைத் தவிர்க்கவும். பார்க்க: சில மாதிரிக் கட்டுரைகள்.
- விக்கிப்பீடியாவில் எழுதிப் பழக, விக்கிப்பீடியா:மணல்தொட்டி பயன்படுத்துங்கள்.
|
செய்திகளில்
|
|
இன்றைய நாளில்...
|
|
|
சிறப்புப் படம்
|
|
ஊதாரி மைந்தன் உவமை அல்லது கெட்ட குமாரன் உவமை என்பது இயேசு கூறிய ஒரு உவமையாகும். இயேசு போதித்துக் கொண்டிருக்கும் போது, அன்றைய சமூகத்தால் ஒதுக்கப்பட்ட பாவம் செய்பவர்களாக கருதப்பட்ட வரி வசூல் செய்பவரும், பாவிகளும் அவருடைய போதனையை கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது தங்களை நல்லவர்களாக, பாவம் அறியாதவர்களாக எண்ணிக்கொண்ட மதகுருக்கள் தமக்குள், இவர் பாவம் செய்தவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள். அப்போது இயேசு அவர்களுக்கு உவமைகளால் பேசத் தொடங்கினார். காணாமல் போன ஆடு, காணாமல் போன காசு போன்ற உவமைகளைத் தொடர்ந்து ஊதாரி மைந்தன் உவமையை இயேசு கூறினார். இது லூக்கா நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயிரம் நல்லவர்கள் நல்வழியில் வாழ்வதை பார்க்கிலும், மனந்திரும்புகிற ஒரே கெட்டமனிதனால் இறைவன் மிகுந்த இன்பம் அடைவார் என்பது இதன் செய்தியாகும்.
படம்: பொம்பெயோ பட்டோனி (1773)
தொகுப்பு
|
|
|
உங்கள் கருத்துகள் | பிற மொழி விக்கிப்பீடியாக்கள்