இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது: சிவ்சங்கர் மேனன்2009-06-10 Tamilwin தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை இலங்கையே முன்வைக்க வேண்டும். அது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை. எந்தவொரு தீர்வு தொடர்பிலும் இந்தியா எவ்வித அழுத்தத்தையும் இலங்கை மீது பிரயோகிக்கப் போவதில்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்தார். நாங்கள் பழையனவற்றை மறந்துவிட முடியாது. அதேவேளை, எதிர்காலம் குறித்தே சிந்திக்க...
அதிகாரப் பகிர்வுடனான தீர்வைக் காண்பதற்கு அரசுடன் இணைந்து செயற்படத் தயார்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு2009-06-10 Tamilwin தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற வடக்கு கிழக்கு இணைந்த அதிகாரப் பகிர்வுடனான தீர்வினைக் காண்பதற்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே இருப்பதாக அக்கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேற்று சபையில் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு...
2012 வரை மின்தட்டுப்பாடு தீராது: வாரியம் தகவல்2009-06-10 Webdunia தமிழ்நாட்டில் 2012ஆம் ஆண்டு வரையில் மின்சார பற்றாக்குறை பிரச்சனை தீராது என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. மின்வாரியத்தின் செயல்பாடுகள் பற்றி நேற்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தனிநபர் மின்சார பயன்பாடு, தேசிய அளவில் இருப்பதைவிட தமிழகத்தில் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் இப்போது...
சென்னையில் இன்று முதல் சுவரொட்டிக்கு தடை2009-06-10 Webdunia சென்னை அண்ணாசாலை மற்றும் காமராசர் சாலைகளில் இன்று முதல் சுவரொட்டி ஒட்டவோ, சுவர் விளம்பரம் செய்யவோ தடை விதிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி...
முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 32009-06-10 Tamilwin அது நடந்துவிட்டது என்பதனை நம்புவதற்கு நம்மில் பலருக்கு இப்போதும் முடியாமல் இருக்கின்றது. தெளிவாக அறிவுக்குத் தெரிகின்ற ஒரு விடயத்தைக் கூட மனதால் ஏற்றுக்கொள்ள முடியாத உளவியல் தாக்கத்தில் நாம் தவிக்கின்றோம். சிறிலங்கா காட்டிய அந்தப் படங்களில் இருந்த அந்த உடல் அவருடையது அல்ல என்றே எம்மில் சிலர் இப்போதும் நம்புகின்றோம். வாழும் காலத்திலேயே...
தடுப்பு முகாம்களில் தவிக்கும் உறவுகளுக்கான இடருதவி: தமிழர் புனர்வாழ்வுக் கழகம்-கனடா2009-06-10 Tamilwin இன்றைய காலகட்டத்தில் எம் தாயக உறவுகள் படும் பேரவலம் பற்றிப் புலம்பெயர் நாடுகளில் வாழும் எம்மக்கள் பெரும் கவலை கொண்டுள்ளனர். இக்கால கட்டத்தில் எம் உறவுகள் படும் இடரைப் போக்கத் தமிழரின் தலையாய நிவாரண அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஆற்றவுள்ள பணிகள் பற்றி அறியப் பலரும் ஆவலாக உள்ளனர். வன்னி மண்ணில் சிறிலங்கா அரசு அமைத்துள்ள தடுப்பு...
பிரான்ஸ் EU சுயேட்சை வேட்பாளர் யூலியா அவர்களுக்கு 6526வாக்குகள்.2009-06-09 Tamilwin கடந்த செப்டெம்பர் 2008 முதல் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் Paris (Ile de France) தொகுதியில் இருந்து நான் போட்டி இடும் முடிவு அறிவிக்கப்பட்டதில் இருந்து.... எனக்கு ஆதரவளித்த என்னுடன் தேர்தல் வேலை செய்த எனக்கு ஆலோசனைகள் நல்கிய வாக்குச் சீட்டுக்களைப் பல்வேறு நகரமன்றங்களில் கை அளித்த எனது...
பெண்கள் மேம்பாட்டு திட்டம் அமல்படுத்த அதிகாரிகள் குழு2009-06-09 Dinamlar புதுடில்லி: பெண்களின் மேம்பாட்டுக்காக பத்து அமைச்சகங்களின் செயலர்கள் தலைமையில், புதிய செயல் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. கல்வி மற்றும் சுகாதாரத்தில் பெண்களை மேம்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீலும், இந்த விஷயத்தில் தனிப்பட்ட முறையில் அக்கறை காட்டுவதால் பெண்களின் முன்னேற்றத்துக்கு தேவையான அனைத்து...
ராணுவ தளவாட ஒப்பந்தத்தில் ஊழல்கருப்பு பட்டியலில் 7 நிறுவனங்கள்2009-06-09 Dinamlar புதுடில்லி: ராணுவ கான்டிராக்ட் ஊழல் விவகாரம் தொடர்பாக, சமீபத்தில், ராணுவ தளவாடங்கள் தொழிற்சாலை வாரிய முன்னாள் தலைவர் சுதிப்டோ கோஷ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல், சிங்கப்பூர் மற்றும் போலந்து நாடுகளை சேர்ந்த ஏழு மிகப்பெரிய கம்பெனிகள் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டை சேர்ந்த மிலிடரி இன்டஸ்ட்ரீஸ், சிங்கப்பூர் டெக்னாலஜி,...
3 ஆண்டுகளில் 5வது போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன்: அடிக்கடி மாற்றப்படுவதால் போலீசார் சுணக்கம்2009-06-09 Dinamlar ஒவ்வொரு ஐ.பி.எஸ்., அதிகாரியின் கனவு, சென்னை போலீஸ் கமிஷனர் பணியிடத்தில் ஒரு நாளாவது உட்கார்ந்துவிடுவது என்பது தான். எனினும், சமீப காலமாக சென்னை நகர போலீஸ் கமிஷனர் பதவி என்றாலே பலருக்கும் அலர்ஜியாக மாறி வருகிறது. காரணம், சிறிய பிரச்னைக்கு கூட போலீஸ் கமிஷனர்கள் மாற்றப்படுவது தான். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை, கடந்த மூன்று ஆண்டுகளில்...
ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 9 பேர் மாற்றம்2009-06-09 Dinamlar சென்னை: தமிழகத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் ஒன்பது பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, உள்துறைச் செயலர் மாலதி வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்: அடைப்புக்குறிக்குள் பழைய பதவி: டோக்ரா - சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி., ஏ.டி.ஜி.பி., (போக்குவரத்து திட்டமிடல் ஏ.டி.ஜி.பி.,) ராதாகிருஷ்ணன் - போக்குவரத்து திட்டமிடல் ஐ.ஜி., சென்னை (ஐ.ஜி., காவலர் பயிற்சி,...
பள்ளிக்கல்வியில் இளநிலை உதவியாளர் 394 பேர் நியமனம்2009-06-09 Dinamlar சென்னை: பள்ளிக் கல்வித்துறையில் 394 இளநிலை உதவியாளர்களுக்கு, பணி ஒதுக்கீடு ஆணை நேற்று வழங்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட இளநிலை உதவியாளர்களுக்கு, 2007ல் சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்வானவர்களில், 415 பணியிடங்கள் பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இவர்களுக்கு பணி ஒதுக்கீடு...
டிச., 3 ஊனமுற்றோர் தினம்: அரசு விடுமுறை அறிவிப்பு2009-06-09 Dinamlar சென்னை: சர்வதேச ஊனமுற்றோர் தினமான டிசம்பர் 3ம் தேதியை, சிறப்பு அரசு விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ம் தேதி சர்வதேச ஊனமுற்றோர் தினம் கொண்டாடப்படுகிறது. "அரசு மற்றும் அரசு உதவிபெறும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊனமுற்றோர், சர்வதேச ஊனமுற்றோர் தினம் கொண்டாட ஒரு நாள் சிறப்பு தற்செயல்...
மாணவர்களுக்கு இலவச சைக்கிள்: 7 லட்சம் பேருக்கு வழங்க அரசு ஏற்பாடு2009-06-09 Dinamlar சென்னை: அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்ந்துள்ள ஆறரை லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு, இம்மாத இறுதிக்குள் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் மட்டும் ஆறு லட்சத்து 71 ஆயிரத்து 437 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில், பெரும்பாலான மாணவர்கள் பிளஸ் 1 சேர்ந்திருப்பர்....
கர்நாடகா அரசு சுற்றுலா தகவல் மையம் இன்றிரவு அறிவிப்பு2009-06-09 Dinamlar சென்னை: கர்நாடக சுற்றுலாத் துறையின் தகவல் மையத்தையும், முன்பதிவு அலுவலகத்தையும், தமிழக சுற்றுலாத் துறையின் செயலர் இறையன்பு துவக்கிவைத்தார். தமிழக சுற்றுலாத் துறை அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கர்நாடக சுற்றுலாத் துறையின் செயலர் ஜோதிராமலிங்கம் பேசியதாவது: கர்நாடக சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், அதன் செழிப்புகளைப் பற்றி கூறுவதற்கும் இதை ஓர்...
கலெக்டர்களின் பி.ஏ.,க்களுக்கு ஜீப் வினியோகம்2009-06-09 Dinamlar சென்னை: சத்துணவு மையங்களைக் கண்காணிக்க, மாவட்ட கலெக்டர்களின் நேர்முக உதவியாளர்களுக்கு ஜீப்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களைக் கண்காணிக்க, மாவட்ட அளவில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேர்முக உதவியாளர் ஒவ்வொரு மாதமும் குறைந்தது 20 பள்ளி மையங்களை ஆய்வு செய்ய வேண்டும். பெரும்பாலான சத்துணவு மையங்கள்,...
60 கோடி போன் இணைப்புகள் இரண்டாண்டுக்குள் வழங்க இலக்கு2009-06-07 Dinamlar பெரம்பலூர் : ""வரும் 2011ம் ஆண்டுக்குள் 60 கோடி போன் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்படுள்ளது,'' என, மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராஜா தெரிவித்தார். இது குறித்து அவர் பெரம்பலூரில் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஆட்சிக் காலத்தில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆதரவால், பெரம்பலூர் தொகுதிக்கு காவிரி...
உ.பி.,யில் பலத்த மழை : 20 பேர் பலி2009-06-07 Dinamlar லக்னோ : உத்தரபிரதேசத்தில் பெய்த பலத்த மழையால் 20 பேர் பலியாகியுள்ளனர். உத்தரபிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. கடும் சூறாவளி காற்றால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இடி மின்னலுடன் பெய்த மழையில் பழைய வீடுகள் இடிந்து விழுந்தன. மின்னல் தாக்கி சிலர் இறந்தனர். லக்னோவில் மூன்று பேரும், கோரக்பூரில் ஐந்து பேரும், இறந்தவர்களில் அடக்கம்....
செனாப் நதியில் பஸ் கவிழ்ந்து 22 பேர் பலி2009-06-07 Dinamlar ஜம்மு : காஷ்மீரில் செனாப் நதியில் மினி பஸ் கவிழ்ந்ததில் 22 பேர் பலியாகினர். காஷ்மீரில் தாத்ரி என்ற இடத்திலிருந்து தோடா மாவட்டம் நோக்கி நேற்று காலை புறப்பட்ட மினி பஸ், பிரேம்நகர் என்ற இடத்தில் செல்லும் போது திடீரென நிலை தடுமாறி செனாப் நதியில் விழுந்தது. இந்த சம்பவத்தில், 22 பேர் பலியாகினர்; ஐந்து பேர் காயமடைந்தனர். ராணுவத்தினரும், போலீசாரும்...
நடுவானில் சுவீடன் நாட்டு பயணிக்கு மாரடைப்பு : பிரிட்டீஷ் விமானம் சென்னையில் தரையிறங்கியது2009-06-07 Dinamlar சென்னை : விமானத்தில் பயணித்த சுவீடன் நாட்டு முதியவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், சிங்கப்பூரில் இருந்து, லண்டனுக்கு பயணித்த, "பிரிட்டீஷ் ஏர்வேஸ்' விமானம், சிறப்பு அனுமதியுடன் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து லண்டன் செல்லும், "பிரிட்டீஷ் ஏர்வேஸ்' விமானம் ஒன்று, 186 பயணிகளுடன், நேற்று முன்தினம்...
அனுமதியின்றி கடலுக்கு சென்ற மீனவர்கள் : புலனாய்வுத்துறை விசாரணை2009-06-07 Dinamlar ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கடலில் அனுமதி பெறாமல் மீன்பிடிக்க சென்ற ஐந்து படகுகள் குறித்து புலனாய்வு துறையினர் விசாரித்து வருகின்றனர். ராமேஸ்வரம் பகுதியில் நேற்று முன்தினம் பலத்த காற்றும், கடல் கொந்தளிப்புமாக இருந்ததால் மீன்துறை அலுவலகத்தில் கடலுக்கு செல்ல அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை. இதனால் ராமேஸ்வரம், மண்டபம் மற்றும் பாம்பன் பகுதி மீனவர்கள்...
அதிகரிக்கும் விபத்துக்கள்: அபாய ஒலியுடன் விரையும் ஆம்புலன்ஸ்2009-06-07 Dinamlar திருவாடானை :அதிகரிக்கும் விபத்துக்களால் தினமும் ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டு பொதுமக்கள் கவலையில் உள்ளனர்.திருவாடானை, ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை, தொண்டி ராமநாதபும் கிழக்குகடற்கரை ரோடுகளில் தினமும் ஏற்படும் விபத்துகளால் உயிர்பலி அதிகரித்து வருகிறது. இரு சக்கரவாகனங்களில் செல்பவர்கள் குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, மோட்டார்பைக்குகளில் 3 முதல் 4 பேர் வரை...
மாணவர்களின் மேற்கூரை பயணம் :கூடுதல் பஸ்கள் அவசியம்2009-06-07 Dinamlar சிவகங்கை :பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முன்வரவேண்டும். கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் கடந்த வாரம் துவங்கியுள்ளன. சிவகங்கை மற்றும் சுற்றுப்புற பள்ளிகளுக்கு கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் பஸ்களில் வருகின்றனர். மாணவர்களுக்கு உரிய நேரத்தில் பஸ்கள் இருப்பதில்லை. உதாரணமாக, காலை 9.30 மணிக்கு பள்ளிக்கு...
வரலாறு படைத்தார் பெடரர்: சாம்ப்ராஸ் சாதனை சமன்2009-06-07 Dinamlar பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரர் முதல் முறையாக கோப்பை வென்று சாதித்தார். இது இவர் வெல்லும் 14வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். இதன் மூலம் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம்(14) வென்றுள்ள அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸ் சாதனையை சமன் செய்து புதிய வரலாறு படைத்தார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர்...
மிரட்டுகிறது கடலின் அதிக சீற்றம்2009-06-07 Dinamlar சென்னை : சென்னை பட்டினப் பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் கடல் சீற்றம் இரண் டாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. கடலோரப் பகுதியில் வசிக்கும் மீனவர்களும், கூலித் தொழிலாளர்களும் வீட்டிற்குள் கடல் நீர் புகுந்து விடுமோ? என்ற அச்சத்தில் வசித்து வருகின்றனர். "கடல் அரிப்பை நிரந்தரமாக தடுக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என,...
பராமரிப்பு பணிக்கு கேரளாவில் மின்தடை2009-06-07 Dinamlar மூணாறு: இடுக்கி நீர் மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடப்பதால் கேரளாவில் தினமும் 30 நிமிடம் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவிற்கு தேவையான மின்சாரத்தில் 60 சதவீதம், இடுக்கி நீர் மின் நிலையத்தில் இருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காகவே இடுக்கி, சிறுதோனி அணைகள் கட்டப்பட்டுள்ளன. 1976ல் இடுக்கி நீர் மின்நிலையம் துவங்கியது முதல், சிறிய அளவில்...